யாழில் பாடையில் பல்கலைக்கழக பட்டத்தை கட்டி போராட்டத்தில் இறங்கிய வேலையில்லா பட்டதாரிகள்!
யாழில் வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டமானது, இன்று வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போராட்டத்தில் பல்கலைக்கழக பட்டத்தை பாடையில் கட்டியவாறு காட்சிபடுத்தி வேலையில்லா பட்டதாரிகள் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இதன்போது, அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமெனவும் தமது கோரிக்கைகளை அரசாங்கம் விரைந்து நிறைவேற்ற வேண்டுமெனவும் இல்லையேல் தொடர்ந்து தாம் பாரிய போராட்டங்களை நடாத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
(Visited 13 times, 1 visits today)





