சுவிட்ஸர்லாந்தில் கருணைக்கொலை செய்யப்பட்ட குதிரை

சுவிட்ஸர்லாந்தில் விபத்தில் சிக்கிய குதிரை ஒன்று கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளது.
கன்டோன் ஆர்காவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 9:30 மணியளவில் குதிரை சவாரியின் போது பாரிய விபத்து ஏற்பட்டது. இதில் குதிரை மற்றும் இருவர் காயமடைந்தனர்.
இதன்போது, 53 வயதான பயிற்றுவிப்பாளர், 13 வயது சவாரி மாணவனுடன் நடந்து சென்றபோது, குதிரை பள்ளத்தில் விழுந்தமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது. குதிரையும் இரண்டு பேரும் பள்ளத்தாக்கில் விழுந்து காயங்களுக்கு உள்ளாகினர்.
குதிரைக்க கடுமையான காயங்கள் ஏற்பட்டமையால் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளது. மேலும் காயமடைந்த நபர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
(Visited 31 times, 1 visits today)