புலம்பெயர் தொழிலாளர்களால் இலங்கைக்கு கிடைத்த பாரிய இலாபம்!
 
																																		வெளிநாட்டுப் பணம் அனுப்புவதில் அதிகரிப்பு காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மே 2024 இல் வெளிநாட்டுப் பணம் 544.4 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் மே 2024 வரையிலான மொத்த மதிப்பு 2,624.4 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
2023 ஜனவரி – மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 11.8% அதிகரிப்பு என மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.
(Visited 8 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
