37000 அடி உயரத்தில் பறந்த போது ஏற்பட்ட அவசர நிலை : லண்டனில் தரையிறக்கப்பட்ட விமானம்!
கிழக்கு மிட்லாண்ட்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட TUI விமானம் லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
இன்று (08.06) காலை சுமார் 6.15 மணியளவில் நாட்டிங்ஹாம் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் ஸ்பெயினில் உள்ள பால்மா டி மல்லோர்காவுக்குச் சென்றது.
விமானம் 37,000 அடி உயரத்தில் கடற்கரையை அண்மித்தபோது போது விமானி அவசர நிலையை அறிவித்தார்.
பின்னர் குறித்த விமானமானது லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. அங்கு உள்ளூர் நேரப்படி சுமார் 7.15 மணிக்கு விமானம் தரையிறங்கியது.
இதனைத் தொடர்ந்து TOM9BP என்ற அழைப்புக் குறியுடன் ஸ்பெயினுக்கு விமானம் தொடர்ந்து மல்லோர்காவிற்கு சென்றது.
எவ்வாறாயினும் விமானம் தரையிறங்கியமைக்கான காரணம் வெளிப்படுத்தப்படவில்லை.
(Visited 2 times, 1 visits today)