இலங்கையில் பணிக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம்

நவகமுவ பிரதேசத்தில் வீதியில் டீசல் எண்ணெய் திட்டு மீது பயணித்த மோட்டார் சைக்கிள் வழுக்கி விழுந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நவகமுவ வைத்தியசாலை வீதியில் வசிக்கும் 30 வயதுடைய ஜனித் சாருக என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று காலை 6.30 மணியளவில் பணிக்கு சென்று கொண்டிருந்த போதே குறித்த, இளைஞன் இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.
வீதியில் இருந்த டீசல் எண்ணெய் திட்டில் வழுக்கி விழுந்ததில்,இளைஞன் படுகாயமடைந்துள்ளார். அதன் பின்னர் நவகமுவ அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
இந்த மோட்டார் சைக்கிள் கவிழ்ந்த இடத்த இடத்தில் பின்னால் வந்த மோட்டார் சைக்கிளும் கவிழ்ந்தது.
(Visited 12 times, 1 visits today)