D-day நினைவேந்தல் : மன்னிப்பு கோரிய பிரித்தானிய பிரதமர்
பிரான்சில் முன்னெடுக்கப்பட்ட இரண்டாம் உலகப்போர் நினைவேந்தல் நிகழ்வுகளில் முழுமையாக கலந்துகொள்ளாதது தவறு தான் என குறிப்பிட்டு, பிரதமர் ரிஷி சுனக் மன்னிப்பு கேட்டுள்ளார்.
தேர்தல் தொடர்பான ஊடக நேர்காணல்களில் கலந்துகொள்ளும் பொருட்டு, பிரதமர் ரிஷி சுனக் பிரான்சில் இருந்து அவசரமாக வெளியேறினார். குறித்த சம்பவம் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
ஏற்கனவே குழப்பமடைந்து பிரபலமடையாத நிலையில், ரிஷி சுனக் தொலைக்காட்சி நேர்காணலுக்காக மீண்டும் லண்டனுக்குச் செல்வதற்காக பிரான்சில் உள்ள வீரர்களுடன் தனது நேரத்தைக் குறைத்துக் கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் தற்போது ரிஷி சுனக் விளக்கமளித்துள்ளதுடன் மன்னிப்பும் கோரியுள்ளார்.
பிரான்சில் நிகழ்ச்சிகள் நிறைவடையும் வரையில் தங்கியிருந்திருக்க வேண்டும், அது தவறு தான் என குறிப்பிட்டுள்ளார். ரிஷி சுனக் கலந்துகொண்ட நிகழ்வில், பிரான்ஸ் ஜனாதிபதியுடன் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமிலா ஆகியோரும் உடனிருந்தனர்.