இந்திய பங்குச் சந்தையில் திடீர் மாற்றம் – விசாரணை கோரும் ராகுல் காந்தி
இந்தியப் பங்குச் சந்தையில் திடீரென ஏற்பட்ட மிதமிஞ்சிய ஏற்ற இறக்கம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புக்குப் பிறகு இந்தியப் பங்குச் சந்தையில் மிகப் பெரிய ஏற்றம் ஏற்பட்டது. தேர்தலுக்குப் பிறகு அது கடுமையாக வீழ்ச்சி கண்டது.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாக் கட்சி மகத்தான வெற்றி பெறும் என்று தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்பு முன்னுரைத்தது. ஆனால், தேர்தல் முடிவு அப்படி அமையவில்லை.
தனியாக ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களை அந்தக் கட்சியால் கைப்பற்ற முடியவில்லை.
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதிலிருந்து இந்தியப் பங்குச் சந்தையில் 400 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தேர்தல் பிரசாரத்தின்போது நரேந்திர மோடியும் அமித் ஷாவும் பங்குச் சந்தை முதலீட்டு ஆலோசனைகளைக் கூறியதாக ராகுல் குறைகூறினார். அது மிகப் பெரிய மோசடி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் இருவரிடமும், தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்பு நடத்தியவர்களிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்று ராகுல் வலியுறுத்தினார்