கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்த காவல் அதிகாரி
பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்தை, சண்டிகர் விமான நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை அதிகாரி ஒருவர் கன்னத்தில் அறைந்தார்.
பாதுகாப்பு சோதனைகளுக்குப் பிறகு கங்கனாவை சிஐஎஸ்எஃப் பெண் காவலர் குல்விந்தர் கவுர்கன்னத்தில் அறைந்தார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கான காரணம் குறித்து தெளிவாக விளக்கப்படவில்லை.
இந்நிலையில், இந்நிலையில், கங்கனாவை தாக்கியது குறித்து பேசியிருக்கும் காவலர் குல்விந்தர் கவுர்,
“100 ரூபாய் காசுக்காக விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் கலந்துகொள்கிறார்கள் என்று கங்கனா கூறியிருந்தார்.
அவரால் அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு உட்கார முடியுமா? கங்கனா இந்த கருத்தைச் சொல்லும்போது அந்தப் போராட்டத்தில் என் அம்மாவும் போராடிக் கொண்டிருந்தார்” என தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கங்கனாவை கன்னத்தில் அறைந்த காவலரான குல்விந்தர் கவுர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவலர் குல்விந்தர் கவுரை பொறுத்தவரை அவர் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.