மத்திய காசாவில் ஐநா பாடசாலை மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்: 35 பாலஸ்தீனியர்கள் பரிதாபமாக பலி
நூற்றுக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்தவர்கள் தஞ்சமடைந்திருந்த ஐநா பாடசாலை மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.
மத்திய காசாவில் உள்ள ஐநாவின் பாடசாலை மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
ஹமாசின் முகாம் அமைந்திருந்த பகுதியையே தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
நுசெய்ரட் அகதிமுகாமில் உள்ள பாடசாலையின் மேல்தளத்தில் காணப்பட்ட இரண்டு வகுப்பறைகள் மீது இஸ்ரேலிய விமானங்கள் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டன என நேரில் பார்த்த ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 26 times, 1 visits today)





