ரஷ்யாவில் அவசரமாக ஒன்றுக்கூடும் உலக தலைவர்கள்!
உலகத் தலைவர்கள் இன்று (06.06) செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஒன்று கூடுகிறார்கள்.
ரஷ்யா செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் சர்வதேச பொருளாதார மன்றத்தை நடத்துகிறது. இதனைத் தொடர்ந்து நாளயை தினம் (07.06) புட்டின் உச்சிமாநாட்டில் பேச உள்ளார்.
இந்நிலையில் ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடுகளைச் சேர்ந்த சில தலைவர்கள் தொடர்ச்சியான தலைப்புகளைப் பற்றி விவாதிக்க சந்திக்க உள்ளனர்.
சீன அதிபர் ஜி ஜின்பிங், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
பொலிவியா மற்றும் ஜிம்பாப்வே அதிபர்கள் புட்டினுடன் வெள்ளியன்று நடைபெறும் முழு அமர்வில் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (06.06) காலை, ரஷ்யாவின் மத்திய வங்கியின் ஆளுநர் எல்விரா நபியுல்லினா, உலகப் பொருளாதாரத்தில் ரஷ்யா ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“தடைகள் இருந்தபோதிலும், உலகப் பொருளாதாரத்தில் அதற்குத் தயாராக இருப்பவர்களுடன் நாம் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்” என்று திருமதி நபியுல்லினா ஒரு குழு விவாதத்தில் கூறினார்.