மெக்சிகோவில் பறவைக் காய்ச்சல் தொற்றினால் முதல் முறையாக ஒருவர் மரணம்

பறவைக் காய்ச்சல் தொற்றினால் முதல் முறையாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது.
மெக்சிகோவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பறவைக் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பறவைக் காய்ச்சல் பரவல் முதலில் மார்ச் மாதத்தில் Michoacan மாகாணத்தில் கோழிகளைப் பாதித்தன.
இதனைத் தொடர்ந்து மெக்ஸிகோவின் ஏனைய மாநிலங்களிலும் பறவைக் காய்ச்சல் பரவல் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பல மில்லியன் கோழிகளை கொலை செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 23 times, 1 visits today)