இந்திய மக்களவை தேர்தல் – இந்திய பிரதமர் மோடியை வாழ்த்திய இலங்கை ஜனாதிபதி

இந்திய மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க டுவிட்டர் எனப்படும் X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இது தெளிவாக உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், அண்டை நாடான இலங்கை இந்தியாவுடனான நெருக்கமான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளவும் இணைந்து செயற்படவும் எதிர்பார்ப்பதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
(Visited 31 times, 1 visits today)