2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக்கைக் கருத்திற்கொண்டு இலங்கையில் முன்னெடுக்கவுள்ள திட்டம்
2032 பிரிஸ்பேன் ஒலிம்பிக்கைக் கருத்தில் கொண்டு பள்ளி அளவிலான விளையாட்டு வீரர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான பொது-தனியார் கூட்டுத் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
2032ஆம் ஆண்டு பிரிஸ்பேன் ஒலிம்பிக்கில் இலங்கையை ‘பதக்கம் வெல்லும் நாடாக’ மாற்றும் வகையில், தனியார் துறை மற்றும் சிவில் சமூகத்தின் ஆதரவுடன் கல்வி அமைச்சும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சும் இணைந்து வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், 2028ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் திறமையான விளையாட்டு வீரர்களை பங்குபற்றச் செய்து, கணிசமான சாதனைகளை எட்டுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் திரு.ஹரின் பெர்னாண்டோ ஆகியோர் இணைந்து முன்மொழியப்பட்ட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.