இலங்கை

இலங்கையில் தீவிர வானிலை: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் காரணமாக, நாடளாவிய ரீதியில் 23,422 குடும்பங்களைச் சேர்ந்த 120,000ற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாகவும், பல பிரதேசங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்த ஏழு முக்கிய அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளது.

1. சீரற்ற காலநிலை காரணமாக 40,728 குடும்பங்களைச் சேர்ந்த 159,991 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2. 13 மாவட்டங்களில் மொத்தம் 17 இறப்புகள் பதிவாகியுள்ளன.

3.ஐந்து பேர் (05) இரத்தினபுரி மாவட்டத்தில், 03 பேர் கொழும்பில், 06 பேர் மாத்தறையில், 02 பேர் காலியில், 01 பேர் கம்பஹாவைச் சேர்ந்தவர்கள்.

4. சீரற்ற காலநிலை காரணமாக பதின்மூன்று (13) பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. களுத்துறை மாவட்டத்தில் இருந்து ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

6. இன்று மாலை நிலவரப்படி, 1,795 குடும்பங்களைச் சேர்ந்த 8,180 பேர் 122 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

7. கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை (ஜூன் 05) மாலை 04.00 மணி வரை மண்சரிவு எச்சரிக்கை அமுலில் இருக்கும்

TJenitha

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!