அயோத்தியின் பைசாபாத் தொகுதி – மோடிக்கு அதிர்ச்சி கொடுக்கும் தேர்தல் முடிவுகள்?
இந்தியாவில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் உத்தரப் பிரதேசத்தின் பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாதி கட்சி முன்னிலையில் இருக்கிறது.
பைசாபாத் தொகுதியில் ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தி உள்ளடங்கும். அங்கு ராமர் ஆலயத்தைத் திறக்க வழிவகுத்த பாரதிய ஜனதாக் கட்சிக்கு ஆதரவாகத் தேர்தல் முடிவுகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
எதிர்பார்த்ததற்கு மாறாகச் சமாஜ்வாதி கட்சி பைசாபாத்தில் (Faizabad) சுமார் 3000க்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாண்டின் தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் ராமர் கோவிலின் திறப்புவிழா சிறப்பாக நடந்தேறியது.
மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி பல ஆண்டுகளாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியது. இந்தியப் பொதுத்தேர்தலில் பைசாபாத் தொகுதியில் பாரதிய ஜனதாக் கட்சி வெல்லும் என்று பலர் எதிர்பார்த்தனர்.
தற்போதைய நிலவரப்படி சமாஜ்வாதி கட்சி உத்தரப் பிரதேசத்தில் உள்ள பைசாபாத் உட்பட 30க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.