மெக்ஸிகோவின் முதல் பெண் அதிபராக பதவியேற்ற க்ளாடியா ஷின்பாம்
மெக்சிகோவின் முதல் பெண் அதிபராக க்ளாடியா ஷின்பாம் தேர்ந்தெடுக்கப்ப்டுள்ளார்.
வட அமெரிக்க நாடான மெக்ஸிகோவில் அதிபர் தேர்தல் ஞாயிற்று கிழமை நடைபெற்ற்ற நிலையில் அதில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மெக்ஸிகோவின் ஆளுங்கட்சியான மொரேனா கட்சி(இடதுசாரி) சார்பில் அதிபர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ள க்ளாடியா ஷின்பாம், ஏறக்குறைய 60 சதவீத்த வாக்குகள் பெற்று, அதிபர் தேர்தலில் அசைக்க முடியாத முன்னிலை பெற்றுளவளதாக அந்நாட்டின் தேசிய தேர்தல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதிகாரப்பூர்வ முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் பெரும் வெற்றியை பதிவு செய்து, மெக்ஸிகோவின் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபராக 61 வயதான க்ளாடியா ஷின்பாம் பதவியேற்றவுள்ளார்.
இதையடுத்து அடுத்த 6 ஆண்டுகளுக்கு மெக்ஸிகோவின் அதிபராக ்க்ளாடியா ஷின்பாம் தொடருவார்.