செயலியை தடை செய்யும் முயற்சியில் வெள்ளை மாளிகை – TikTokஇல் இணைந்த ட்ரம்ப்
வெள்ளை மாளிகையிலிருந்தபோது தடைசெய்ய முயன்ற TikTok செயலியில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இணைந்துள்ளார்.
டிரம்ப் பதிவேற்றிய காணொளியைக் கிட்டத்தட்ட 40 மில்லியனுக்கு அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
குறுகிய காலத்தில் அவரை TikTok கணக்கில் 2.5 மில்லியனுக்கும் அதிகமானோர் பின்பற்றுகின்றனர்.
ByteDance என்ற சீன நிறுவனத்துக்குச் சொந்தமான TikTok சீனாவை எதிர்த்த ட்ரம்ப் 2020ஆம் ஆண்டில் ByteDance நிறுவனம் TikTokஐ கைமாற்றவில்லையென்றால் அது தடை செய்யப்படும் என்று அறிவித்தார்.
பின்னர் ஜோ பைடன் வசம் ஆட்சி மாறியபிறகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் TikTok தொடர்பான மசோதாவை நிறைவேற்றினர்.
அடுத்த 270 நாட்களுக்குள் Tiktok அமெரிக்க நிறுவனத்திடம் விற்கப்படவேண்டும். இல்லையென்றால் அமெரிக்காவில் TikTok தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.