மோசமான வானிலை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர்

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக , நாட்டின் பல பகுதிகள் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளை எதிர்கொண்டுள்ளன.
இந்த அனர்த்தத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் காணாமல் போயுள்ளதாக அரச பாதுகாப்பு அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.
இது தவிர, பேரிடர் சூழ்நிலைகள் குறித்து தெரிவிக்கவும், ஆதரவு சேவைகளை வழங்கவும் காவல்துறை சிறப்பு பேரிடர் நிவாரணப் பிரிவை நிறுவியுள்ளது.
இதன்படி, 011 2421820 / 011 2421111 என்ற இந்த விசேட தொலைபேசி இலக்கங்களின் ஊடாக அனர்த்த நிவாரணத்திற்காக அழைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த மோசமான காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் நாளை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
(Visited 20 times, 1 visits today)