மோசமான வானிலை – ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு
சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கு மாவட்ட செயலாளர்களுக்கு பணத்தை ஒதுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கடந்த மூன்று வாரங்களாக இன்று (02) காலை வரை ஏற்பட்ட அனர்த்தங்களினால் நாடளாவிய ரீதியில் 3727 குடும்பங்களைச் சேர்ந்த 11864 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதுடன் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
மொத்தம் 17 வீடுகள் இழப்புகளும், 3304 பகுதி வீடுகளும், 54 வணிக இட இழப்புகளும், 2611 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அந்த மையம் கூறுகிறது.
அதிகளவான அனர்த்தங்கள் தென் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளன.
1,982 குடும்பங்களைச் சேர்ந்த 6,840 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,005 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வெள்ளம், பலத்த காற்று, மண்சரிவு, மரம் மற்றும் மண் சரிவு, கடும் மழை போன்றவற்றினால் இந்த அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.