பின்லாந்தில் 84 ஆண்டுகளுக்குப் பின் நூலத்திற்கு திரும்ப கிடைத்த புத்தகம் – ஆச்சரியத்தில் அதிகாரிகள்
பின்லாந்தில் 1939ஆம் ஆண்டு திரும்பக் கொடுக்கப்பட வேண்டிய புத்தகம் ஒன்று 84 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த மாதமே திரும்ப கிடைத்ததாக நூலகம் தெரிவித்துள்ளது.
பின்லந்து மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட Refugees எனும் ஆங்கில நூல் திரும்பக் கிடைத்துள்ளதாக (Helsinki) நகரின் Oodi எனும் நூலகம் தெரிவித்துள்ளத.
ஆர்தர் கோனன் டோயில் (Arthur Conan Doyle) அந்த நூலை 1893இல் எழுதினார். அது 1939ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதியே திரும்ப கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
அந்த ஆண்டு நவம்பர் பின்லாந்து மீது சோவியத் யூனியன் (Soviet Union) படையெடுத்ததால் நாடு முழுதும் சலசலப்பு ஏற்பட்டிருக்கலாம். புத்தகத்தை இரவல் வாங்கியவர் அதைத் திரும்பக் கொடுக்கமுடியாமல் போயிருக்கலாம் என்று நூலகம் நம்புகிறது.
பின்லந்துக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே போர் சுமார் 4 மாதங்கள் நீடித்தது. புத்தகத்தை இரவல் வாங்கியவர் போரில் பிழைத்தாரா என்பது தெரியவில்லை.