சுவிட்சர்லாந்து நாட்டின் எல்லைகளை கடுமையாக்கும் அரசு

ஜெர்மனியில் நடந்த ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் மற்றும் பிரான்சில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகளின் போது அதிகரித்த பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக, சுவிட்சர்லாந்து தனது எல்லைகளில் ‘தற்காலிகமாக’ கட்டுப்பாடுகளை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இஸ்லாமிய குழுவின் பயங்கரவாத அச்சுறுத்தல்களை மேற்கோள்காட்டி பெடரல் கவுன்சில், ஜூன் முதலாம் திகதி முதல் செப்டம்பர் எட்டாம் தகிதி வரை, 2024 ஆம் ஆண்டு பாராலிம்பிக் போட்டிகள் முடியும் வரை சுவிஸ் எல்லைகளில் கட்டுப்பாட்டை வலுப்படுத்த முடிவு செய்துள்ளது.
எனவே நீங்கள் ஷெங்கன் மண்டலத்திலிருந்து சுவிட்சர்லாந்திற்குள் நுழைந்தாலும், உங்கள் கடவுச்சீட்டைக் காண்பிக்குமாறும், உங்கள் வருகையின் நோக்கம் குறித்தும் வினவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 26 times, 1 visits today)