ரஷ்யா – உக்ரைனில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்களை விடுவிக்க இலங்கை முயற்சி
ரஷ்யாவுக்காகப் போராடும் நூற்றுக்கணக்கான முன்னாள் ராணுவ வீரர்களையும், உக்ரைனில் உள்ள போர்க் கைதிகளையும் விடுவிக்க முயற்சிப்பதாக இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து உக்ரைனுக்கு எதிராக போரிடும் ஓய்வுபெற்ற இராணுவத்தினர் தொடர்பாக 455 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், 37 பேர் காயமடைந்துள்ளதாகவும், 16 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
காயமடைந்த 37 இலங்கையர்கள் உட்பட இவர்களை விடுவிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த கொழும்பு தூதுக்குழுவொன்றை ரஷ்யாவிற்கு ஜூன் மாதம் அனுப்பும் என வெளிவிவகார அமைச்சர் தாரக பாலசூரிய செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
10 முதல் 12 இலங்கை போர்க் கைதிகளை விடுவிப்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் உக்ரேனிய ஜனாதிபதியுடன் பேச உள்ளதாகவும் பாலசூரிய மேலும் தெரிவித்தார்.
சுற்றுலா வீசாவில் ரஷ்யா செல்ல விரும்பும் இலங்கையர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவது குறித்து பாதுகாப்பு அமைச்சின் பரிந்துரையை பெற்றுக்கொள்வது அவசியமானது என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் சுற்றுலா விசாவில் ரஷ்யா செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை பாதுகாப்பு படையில் இருந்து நீக்குமாறு ரஷ்ய அரசிடம் இலங்கை கோரிக்கை விடுப்பதாகவும் வெளியுறவு அமைச்சர் தாரக பாலசூரிய தெரிவித்துள்ளார்.