WhatsAppஇல் அறிமுகமாகும் புதிய அம்சம்!
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் புதிய ஏ.ஐ அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.
அந்த வகையில் வாட்ஸ்அப்-ல் ஏ.ஐ இமேஜ் உருவாக்க புதிய அம்சம் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
இதற்கு பிரத்யேக ஐகானை கொண்டு வருகிறது. இந்த அம்சம் தற்போது சோதனை அடிப்படையில் பீட்டா பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
அதே போல் வாட்ஸ்அப்-ல் மெட்டா சாட்போர் அறிமுகம் செய்யப்பட்டு பல்வேறு பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதம் முதல் இது வழங்கப்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப்-ல் ஏ.ஐ இமேஜ் உருவாக்க வாட்ஸ்அப் பக்கம் சென்று பின் ஒருவரின் ஷேட் பக்கம் செல்ல வேண்டும். இப்போது ஷேட் பக்கத்தில் உள்ள Attachment box கிளிக் செய்து Imagine கொடுக்கவும்.
இப்போது அந்த ஆப்ஷனை கிளிக் செய்தால் மெட்டா ஏ.ஐ சாட்போட் பக்கம் ஓபன் ஆகும். அங்கு நீங்கள் எப்படி படம் உருவாக்க வேண்டும் என்பதை டைப் செய்ய வேண்டும், அதாவது prompt கொடுக்க வேண்டும். இதன் பின் நீங்கள் கொடுத்த குறிப்பிற்கு ஏற்ப ஏ.ஐ இமேஜ் உருவாக்கப்படும். இந்த அம்சம் விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வழங்கப்பட உள்ளது.