கொழும்பில் ஆபத்தான நிலையில் உள்ள மரணங்கள் தொடர்பில் புதிய சட்டம்
கொழும்பு மாநகர சபைக்குள் உள்ள தனியார் காணிகளில் உள்ள மரங்களுக்கு குறித்த காணி உரிமையாளர் பொறுப்பேற்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பான சட்ட அறிவித்தல் ஒன்றை வெளியிட கொழும்பு மாநகர சபை ஏற்பாடுகளை செய்துள்ளது.
அத்துடன், அரச மற்றும் தனியார் அலுவலகங்களில் அபாயகரமான மரங்களுக்கு அந்தந்த அலுவலகங்களின் தலைவர்களும் பொறுப்பேற்க வேண்டுமென கொழும்பு மாநகர சபை கூறுகிறது.
அதிக காற்று மற்றும் மழை காரணமாக கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் அண்மையில் 60 பாரிய மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன. இவற்றில் தனியார் நிலத்தில் மரங்கள் உள்ளன.
தனியார் மற்றும் அரச அலுவலகங்கள் உள்ள காணிகளில் உள்ள ஆபத்தான மரங்கள் தொடர்பில் கொழும்பு மாநகர சபைக்கு தொடர்ந்தும் அறிவிக்கப்படும்.
அதன் பின்னர் குறித்த காணி உரிமையாளர்கள் அல்லது அலுவலக தலைவர்கள் அந்த மரங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, அந்த மரங்களின் அபாயகரமான நிலைமைகளைக் கட்டுப்படுத்துவது சம்பந்தப்பட்ட நில உரிமையாளரிடம் உள்ளது. அத்துடன் குறித்த காணிகளிலுள்ள ஆபத்தான மரங்களை அகற்றுவதற்கு கொழும்பு மாநகர சபைக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பில் பிரதான வீதிகளின் இருபுறமும் உள்ள பெரிய மரங்களின் நிலை குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு மாநகர சபை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அறிவித்துள்ளது.
கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதான வீதிகளின் இருபுறங்களிலும் சுமார் 500 பாரிய மரங்கள் காணப்படுவதாகவும் அவை பல வருடங்கள் பழமையானவை எனவும் மாநகரசபையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த மரங்களை பரிசோதித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வழங்கிய அறிக்கையின் பின்னர் கொழும்பு மாநகர சபை ஆபத்தான மரங்களை அகற்றவோ அல்லது ஆபத்தான கிளைகளை அகற்றவோ நடவடிக்கை எடுத்துள்ளது.