அமெரிக்காவில் வங்கி கட்டிடத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வெடி விபத்து – பலர் காயம்
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள வங்கி கட்டிடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் காயமடைந்தனர்.
வெடிவிபத்துக்கான காரணம் வாயு கசிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிப்பில் மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடிவிபத்தை அடுத்து, கட்டிடத்திற்கு வந்த அவசர சேவை அதிகாரிகள், கட்டிடத்தில் இருந்தவர்களை உடனடியாக வெளியேற்றினர்.
வெடிப்பு ஏற்பட்ட கட்டிடத்தின் அருகில் உள்ள மக்களை வெளியேற்றும் பணியில் அவசரகால சேவைகள் ஈடுபட்டுள்ளன.
கட்டிடம் இடிந்து விழும் அபாயத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெடிவிபத்துக்கான காரணம் வாயு கசிவு என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வெடிவிபத்தில் கட்டிடத்தின் முதல் தளம் ஏறக்குறைய முற்றிலும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.





