செய்தி விளையாட்டு

மேலும் ஒரு சாதனையை முறியடித்த கிறிஸ்டியானோ ரொனால்டோ

கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதியில் உள்ள அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார்.

அல்-நாசர் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் நேற்று அல்-இத்திஹாட் அணியை எதிர்கொண்டது. இதில் அல்-நாஸர் அணி 4-2 என அல்-இத்திஹாட் அணியை வீழ்த்தியது.

இந்த போட்டியில் 39 வயதான கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 கோல்கள் அடித்தார். இதன்மூலம் சவுதி புரோ லீக் கால்பந்தில் ஒரு சீசனில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக அப்டெர்ரஜாக் ஹம்தல்லா 2019-ல் 34 கோல்கள் அடித்ததுதான் சாதனையாக இருந்தது. அதை தற்போது கிறிஸ்டியானோ ரொனால்டோ முறியடித்துள்ளார்.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் கிறிஸ்டியானோ ரொனால்டோ “சாதனைகளை நான் பின்தொடரவில்லை. அதுதான் என்னை பின்தொடர்கின்றன” எனக் குறிப்பிட்டுள்ளார்.

(Visited 28 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி