வாகன இறக்குமதியை படிபடியாக தளர்த்த இதுவே தருணம் : இலங்கை மத்திய வங்கி ஆளுநர்!

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசாங்கம் தீர்மானித்தால், வெளிநாட்டு கையிருப்பை நிர்வகிக்கும் திறன் மத்திய வங்கிக்கு உண்டு என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (28) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் மத்திய வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், மத்திய வங்கி தனது கொள்கை வட்டி வீதத்தை மாற்றியமைக்கவில்லை.
“ஏற்கனவே சில வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. வாகனங்களின் இறக்குமதியை படிப்படியாக எளிதாக்குவது முக்கியமான முடிவு. அன்னியச் செலாவணியை எங்களால் நிர்வகிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
(Visited 12 times, 1 visits today)