உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : 5 ஆண்டுகளுக்கு பின்னர் பரிதாபமாக பறிபோன உயிர்
உலகையே அதிரவைத்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பலத்த காயமடைந்த பெண் உயிரிழந்தார்.
திலினி ஹர்ஷனி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதிகளின் இலக்குகளில் ஒன்றான நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தின் மீதான தாக்குதலில் இவர் படுகாயமடைந்திருந்தார்.
அந்த தாக்குதலில் அவரது மகனும் உயிரிழந்திருந்தார்.
தாக்குதலில் படுகாயம் அடைந்த பெண், சுமார் 5 ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினமான அன்று சஹாரான் ஹாஷிம் தலைமையிலான தீவிரவாதிகளால் 08 இடங்களில் 10 தற்கொலைத் தாக்குதல்களை நடத்தி 273 பேரின் உயிரைப் பறித்தனர்.
இதில் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர், அவர்களில் சிலர் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அந்தவரிசையில் 5 ஆண்டுகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திலினி ஹர்ஷனி உயிரிழந்துள்ளமை அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.