சுவிட்சர்லாந்தில் இருக்கும் தமிழ் புகலிட கோரிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
சுவிட்சர்லாந்தில் புகலிட கோரிக்கையாளர் சட்டங்களில் சில திருத்தங்கள் நடைமுறைக்கு கொண்டு வரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் சனிக்கிழமை முதல் இந்த திருத்தங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புகலிட கோரிக்கையாளர்களுக்கான வீடமைப்பு, தொழில் வாய்ப்பு போன்றவற்றை மேம்படுத்தவும் ஆவணமற்ற ஏதிலிகளுக்கு பயிற்சி வழங்கவும் புதிய சட்ட திருத்தங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி தொடக்கம் இந்த சட்டத் திருத்தம் நடைமுறைக்கு வருகின்றது.
தற்காலிகமாக தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டவர்கள் ஒரு கான்டனிலிருந்து மற்றுமொரு கான்டனுக்கு சென்று வேலை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.
வெளிநாட்டு பிரஜைகள் மற்றும் உள்ளீர்ப்பு சட்டங்களில் செய்யப்பட்ட மாற்றங்களின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
தங்களது பணியிடத்திற்கு செல்வதற்கு 90 நிமிடங்களுக்கு மேல் செலவிட நேரிடுமாயின் அவர்கள் ஒரு கான்டனிலிருந்து மற்றுமொரு கான்டனுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட உள்ளது.
ஆவணங்கள் அற்ற புகலிட கோரிக்கையாளர்கள் கோரிக்கையாளர்கள் இலகுவில் தொழில் கல்வியை பெற்றுக் கொள்ளக்கூடிய வகையிலும் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.