ஆனைவிழுந்தான் பகுதியில் மர்மமான முறையில் இறக்கும் பறவைகள், மீன்கள்
ரம்சா சதுப்பு நிலமான ஆனைவிழுந்தான் பறவைகள் சரணாலயம் மற்றும் அதன் நீர்நிலைகளில் நூற்றுக்கணக்கான பறவைகள் மற்றும் மீன்கள் இறந்துள்ளன.
கடந்த சில நாட்களாக இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இப்பகுதிகளில் புலம் பெயர்ந்த பறவைகள் கூட்டங்கள் சுதந்திரமாக வாழ்கின்றன.
இந்த பகுதியில் ஒரு தொழிற்சாலை சட்டவிரோதமாக ரசாயன கழிவுகளை கொட்டுவதாக கூறப்படுகிறது.
இதனால் பறவைகள் மற்றும் மீன்கள் உயிரிழப்பதாக அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, மீன்கள் மற்றும் பறவைகளின் மாதிரிகள் பேராதனை விஷேட கால்நடை வைத்தியப் பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மரணத்திற்கான காரணத்தை கண்டறிய ஆய்வுகூட பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எனினும் இதுவரை முடிவுகள் வரவில்லை என வனப் பாதுகாவலர் டபிள்யூ.எல். திரு உபநந்தா தெரிவித்தார்.
எவ்வாறாயினும் பாசிகள் அகற்றப்படாமல் புறக்கணிக்கப்பட்டமையினால் நீர்வழிப்பாதைகள் மாசடைந்துள்ளதாக நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுவே இந்த உயிரிழப்புக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என அவர்கள் கருதுகின்றனர்.