பாகிஸ்தானில் மீண்டும் வெடித்த மதக் கலவரம் : 100 இஸ்லாமியர்கள் கைது!
பாகிஸ்தானில் புனித குரானை அவமதித்தமையால் இரு கிருஸ்தவர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.
தற்போது இந்த சம்பவம் தொடர்பில் ஏறக்குறைய 100 பேர் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பஞ்சாப் மாகாணத்தில் உள்ள சர்கோதா நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இருவரும் புனித குரானை எரித்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனை கண்ட இஸ்லாமியர்கள் அவர்களின் வீட்டிற்கு தீவைத்ததுடன், அவர்கள் இருவரையும் தாக்கியுள்ளனர்.
இதில் காயமடைந்த தந்தை மற்றும் மகன் ஆகிய இருவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தேவாலயங்களில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக பஞ்சாப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஒரு கும்பலால் சுற்றி வளைக்கப்பட்ட 10 கிறிஸ்தவர்களை போலீசார் மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது குடும்பத்தினரை மீட்கும் போது பல அதிகாரிகள் காயம் அடைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
பாக்கிஸ்தானில் நிந்தனை குற்றச்சாட்டுகள் பொதுவானவை மற்றும் நாட்டின் நிந்தனைச் சட்டங்களின் கீழ், இஸ்லாம் அல்லது இஸ்லாமிய மதப் பிரமுகர்களை அவமதித்த குற்றவாளிகள் யாராக இருந்தாலும் மரண தண்டனை விதிக்கப்படலாம்.