மூன்றாவது முறையாக IPL பட்டம் வென்ற கொல்கத்தா அணி
ஐபிஎல் தொடரின் இறுதிபோட்டியில் ஐதராபாத் – கொல்கத்தா மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய ஐதராபாத் அணி தொடக்கம் முதலே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஐதராபாத் அணி 18.3 ஓவரில் 113 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
அதிகபட்சமாக கேப்டன் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா அணி தரப்பில் ரஸல் 3 விக்கெட்டும் ஸ்டார்க், ரானா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக சுனில் நரைன் – குர்பாஸ் களமிறங்கினர். சுனில் நரைன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து குர்பாஸ் உடன் வெங்கடேஷ் அய்யர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 91 ரன்கள் எடுத்தது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்பாஸ் 32 ரன்னில் ஆட்டமிழந்தார், அடுத்து வந்த ஷ்ரேயாஸ் முதல் பந்தை பவுண்டரிக்கு விளாசினார்.
அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஸ் அரை சதம் விளாசியது மட்டுமல்லாமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இறுதியில் கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 114 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஐபிஎல் கோப்பையை 3-வது முறையாக கொல்கத்தா அணி கைப்பற்றியது. ஐதராபாத் தரப்பில் கம்மின்ஸ், ஷபாஷ் அகமது தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.