பிரபல இசையமைப்பாளர் ஆனந்த பெரேரா காலமானார்

மூத்த இசையமைப்பாளரும், பாடகருமான ஆனந்த பெரேரா காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 67 ஆகும்.
கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (26) காலமானார்.
இந்நாட்டில் மிகவும் பிரபலமாக இருந்த சிஹாசக்தி இசைக்குழுவின் தலைவரும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர், கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய இசைக் கலைகளில் தேர்ச்சி பெற்ற இந்த நாட்டில் பிறந்த சிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
(Visited 13 times, 1 visits today)