பசிலை சந்திக்க லான்ஸாவுக்கு அழுத்தம் கொடுக்கும் ரணில்
அரசியல் ரீதியாக விலகியிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சாவிற்கும், மொட்டு கட்சியின் ஸ்தாபகரான பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட சந்திப்பொன்று அவசரமாக நடத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி அலுவலகம் பரிந்துரைத்துள்ளதாக தேசய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு காலத்தில் பசில் ராஜபக்ஷவுடன் நெருக்கமாக இருந்த உறுப்பினர் நிமல் லான்சா, பின்னர் தனியாக அணியொன்றை உருவாக்கி வழிநடத்தி வருகின்றார்.
எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே இந்த விசேட சந்திப்பை நடத்துவதற்கான பிரேரணையை நிமல் லான்சா எம்.பியிடம் சமர்ப்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பசில் ராஜபக்ஷவை சந்திக்க முடியும் எனவும் ஆனால் தனது அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளப் போவதில்லை எனவும் லான்சா எம்.பி தெரிவித்துள்ளார்.
அண்மையில் பசில் ராஜபக்ஷவை ஜனாதிபதியின் தேர்தல் வழிநடத்தல் குழுவிற்கு அழைத்தமைக்கு சுயேச்சை எம்.பி.க்களின் புதிய கூட்டணியின் தலைவர்களான நிமல் லான்சா மற்றும் அனுர யாப்பா ஆகியோர் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
இந்த எதிர்ப்புகளை தீர்த்து வைப்பதற்காக உரிய கூட்டத்தை ஒருங்கிணைக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தனவை நியமித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
பசிலுக்கும் லான்சாவுக்கும் இடையிலான சந்திப்பு அடுத்த வாரம் இடம்பெறும் சாத்தியம் அதிகம் என தேசய பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.