பதற்றத்திற்கு மத்தியில் தைவானுக்கு சென்ற அமெரிக்க பிரதிநிதிகள்!
தைவானின் கடல் மற்றும் வான் பரப்புகளில் சீன படையினர் முகாமிட்டுள்ள நிலையில், அமெரிக்க பிரதிநிதிகள் தைவானுக்கு விஜயம் செய்துள்ளனர்.
இந்த வாரம், தைவானின் புதிய ஜனாதிபதி வில்லியம் லாய் சிங்-தே பதவியேற்றதைத் தொடர்ந்து, பெய்ஜிங் இரண்டு நாட்கள் போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டது.
இந்நிலையில் தைவான் ஜலசந்தி பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்க பிரதிநிதிகளின் விஜயம் அமைந்துள்ளது.
சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், ஒரு சீனா கொள்கையை தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், தைவானுக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எந்தப் பயணத்திற்கும் ஏற்பாடு செய்யக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்தே இந்த பதற்றம் அதிகரித்துள்ளது.
இது அமெரிக்காவிற்கும் – சீனாவிற்கும் இடையிலான உறவை மேலும் மோசமடைய செய்யும்.
(Visited 9 times, 1 visits today)