எண்பது ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்
இரண்டாம் உலகப் போரின் பிரபலமான நீர்மூழ்கிக் கப்பலான யுஎஸ்எஸ் ஹார்டர் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் தென் சீனக் கடலில் உள்ள லூசன் தீவின் கடலோரப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடற்படை கட்டளை (NHHC) நேற்று செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
தென் சீனக் கடலில் இருந்து 3,000 அடிக்கு கீழ் இந்த நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக அமெரிக்க கடற்படை வரலாறு மற்றும் பாரம்பரியக் கட்டளையின் தொல்பொருள் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த யுஎஸ்எஸ் ஹார்டர் நீர்மூழ்கிக் கப்பல் ஆகஸ்ட் 29, 1944 அன்று 79 பணியாளர்களுடன் நடந்த போரின் போது மூழ்கடிக்கப்பட்டது. இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஜப்பானால் மூழ்கடிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
ஜப்பானிய அறிக்கைகளின்படி, யுஎஸ்எஸ் ஹார்டர் நீர்மூழ்கிக் கப்பலின் பணியாளர்கள் கடைசிக் கணம் வரை போராடி, மூழ்குவதற்கு முன்பு தங்கள் எதிரிகள் மீது மூன்று டார்பிடோக்களை வீசினர்.
“ஹிட்’எம் ஹார்டர்” என்ற முழக்கத்தின் கீழ் பயணம் செய்த யுஎஸ்எஸ் ஹார்டர் என்ற நீர்மூழ்கிக் கப்பலின் கேப்டன் கமாண்டர் சாமுவேல் டீலிக்கு மரணத்திற்குப் பின் அமெரிக்காவின் உயரிய ராணுவ விருதான மெடல் ஆஃப் ஹானர் வழங்கப்பட்டதுடன், அதன் பணியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
வெளிநாட்டு ஊடகங்களின்படி, “லாஸ்ட் 52” திட்டக் குழு, நீர்மூழ்கிக் கப்பலின் படங்களை எடுக்க மேம்பட்ட புகைப்படம் மற்றும் நீருக்கடியில் ரோபோட்டிக்ஸைப் பயன்படுத்த வேண்டும்.
“லாஸ்ட் 52” என்பது இரண்டாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட அனைத்து 52 அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்களையும் கண்டுபிடித்து நினைவூட்டும் திட்டமாகும்.
எவ்வாறாயினும், யுஎஸ்எஸ் ஹார்டர் நீர்மூழ்கிக் கப்பலை எக்காரணம் கொண்டும் பரிசோதிக்க மாட்டோம் என்றும், அதன் பணியாளர்களுக்கு போர் புதைகுழியாக அது தொடரும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.