இந்தியாவில் பயங்கர தீவிபத்து- 22 பேர் பலி, உயிரிழப்புகள் அதிகரிக்குமென அச்சம்
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் சுமார் 12 குழந்தைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீயில் சிக்கியவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளதோடு, நிவாரணப் பணிகளை விரைவில் வழங்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.





