ரஷ்யாவில் மேற்கூரை விழுந்தமையால் 12 குழந்தைகளுக்கு நேர்ந்தக் கதி!

ரஷ்யாவின் தெற்கு கிராஸ்னோடர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றின் மேற்கூரை விழுந்ததில் ஏறக்குறைய 12 குழந்தைகள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சூறாவளி காற்று தொடர்பில் அப்பகுதி முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிராஸ்னோடரில் உள்ள பிராந்திய வழக்குரைஞர் அலுவலகம் ஒரு அறிக்கையில், “பலத்த காற்றால் மேற்படி விபத்து இடம்பெற்றதாக தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் பாதுகாப்பு விடயங்களில் அக்கறையின்மை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
(Visited 19 times, 1 visits today)