2ஆம் உலகப் போரில் உலக நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய போர் கப்பல் கண்டுபிடிப்பு
இரண்டாம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலின் சிதைவுகள் தென் சீனக் கடலின் அடிப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அது கிட்டத்தட்ட 80 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் உலகப் போரின் போது அதிக எண்ணிக்கையிலான ஜப்பானிய போர்க்கப்பல்களை மூழ்கடித்தது இந்த நீர்மூழ்கிக் கப்பல் என்று கூறப்படுகிறது.
பிலிப்பைன்ஸின் வடக்குத் தீவான லூசோன் பகுதியில் 3,000 அடி (914 மீட்டர்) உயரத்தில் யுஎஸ்எஸ் ஹார்டர் நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹார்டர் என்ற நீர்மூழ்கிக் கப்பல் 1944ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 29ஆம் திகதியன்று 79 பேர் கொண்ட குழுவினருடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
(Visited 9 times, 1 visits today)