மூன்றாம் உலகப் போர் வெடிக்கும் அபாயம்! பகிர் கிளப்பும் பிரபல இந்திய ஜோதிடர்
ரஷ்யா மற்றும் உக்ரைன், அமெரிக்கா மற்றும் சீனா, இஸ்ரேல் மற்றும் காசா ஆகியவற்றுக்கு இடையே நிலவும் மோதல்கள் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மூன்றாம் உலகப் போரின் சாத்தியக்கூறுகள் பற்றிய தீவிர ஊகங்களுக்கும் விவாதத்திற்கும் வழிவகுத்தன.
பல ஆண்டுகளாக, மக்கள் மற்றொரு உலகளாவிய போரின் சாத்தியம் குறித்து ஊகித்து விவாதித்து வருகின்றனர், அதே நேரத்தில் முதல் இரண்டு உலகப் போர்களின் கொடூரங்கள் இன்னும் பலரை வேட்டையாடுகின்றன.
கடந்த காலத்தில், நாஸ்ட்ராடாமஸ் போன்ற பிரபல ஜோதிடர்கள் WW3 பற்றி கணிப்புகளை கூறியுள்ளனர். தற்போது, நவீன கால இந்திய ஜோதிடரான குஷால் குமார், சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
ஏற்கனவே பாபா வங்கா,நாஸ்ட்ராடாமஸ் கணித்த கணிப்புகள் அப்படியே நடைபெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படும் நிலையில், இன்னும் சில வாரங்களில் 3-வது உலக போர் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்தியாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் குசால் குமார் தனது வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதே பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக தனது வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
2024-ல் உலகெங்கிலும் நடைபெறும் போர் பதற்ற சூழ்நிலைகளே இதை கணிக்க கூடியதாக உள்ளது. கொரியா நாடுகள், சீனா-தைவான், மத்திய கிழக்கு போன்ற போர் பதற்றம் உள்ளிட்ட செய்திகளும், இஸ்ரேல், காசா போரும் இதற்கு உதாரணமான கணிப்பை தருகின்றன.மேலும் மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன்-ரஷியா போர் உள்ளிட்டவையும் நேட்டோ நாடுகளின் கோபமும் வெளிப்படும்.
சில நாடுகளில் ஆட்சி அதிகாரம் பெற்ற சிலர் பெரும் கவலைக்குரிய சூழ்நிலையை எதிர்கொள்வார்கள். சிலர் கடுமையான உடல் நிலையால் பாதிக்கப்படலாம் அல்லது ராஜினாமா செய்ய நேரிடலாம். அதே நேரத்தில் இன்னும் சில நாடுகளின் அரசியல் எழுச்சி ஏற்படலாம். அதை தடுக்க ராணுவம் கொண்டு வரப்படலாம். இதனால் இன்னும் சில வாரங்களில் 3-வது உலக போர் நடைபெற வாய்ப்பு உள்ளது. ஜூன் 18 ஆம் திகதிக்கு பிறகு 3-வது உலக போரை தூண்டுதலுக்கான சாத்திய கூறுகள் உள்ளன. அதற்கு முன்னதாக ஜூன் 10 ஆம் திகதியோ அல்லது 29 ஆம் திகதியோ கூட நிகழ வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர் தனது வலைதளப்பக்கத்தில் கூறி உள்ளார்.
அரியானாவின் பஞ்சகுலாவைச் சேர்ந்த ஜோதிடர் குஷால் குமார், உலக நிகழ்வுகளை முன்னறிவிக்கும் ஜோதிடர் என தன்னை வர்ணித்துக் கொள்கிறார். இதனால் மூன்றாம் உலகப்போர் குறித்த அவரது முன்னறிவிப்பு செய்தி, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.