இலங்கையில் ரயில் சேவைகள் இரத்து!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக பாதையூடான ரயில் சேவை தடைபட்டுள்ளது.
புகையிரத பாதையில் மண், கற்கள் மற்றும் மரங்கள் வீழ்ந்துள்ளமையினால் புகையிரத சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, கொழும்பு – பதுளை மற்றும் பதுளை – கொழும்பு இரவு நேர அஞ்சல் புகையிரதங்களையும் இரத்து செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்றைய விசேட புகையிரதமும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரத திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
(Visited 24 times, 1 visits today)