உலகளாவிய ரீதியில் முன்னேற்றம் கண்டுள்ள இலங்கை
இலங்கை உள்ளிட்ட 5 நாடுகள் கருத்துச் சுதந்திரத்தில் முன்னேற்றம் கண்டுள்ளன.
உலகளாவிய கருத்துச் சுதந்திர வெளிப்பாடு தொடர்பான புதிய அறிக்கையொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய பிரேசில், தாய்லாந்து, நைஜர் மற்றும் ஃபிஜி ஆகிய நாடுகளுடன் இலங்கையும் அதிக வெளிப்படைத்தன்மையை நோக்கி நகர்வதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
25 குறிகாட்டிகளைப் பயன்படுத்தி, உலகளவில் சுதந்திரமான கருத்து மற்றும் தகவலுக்கான உரிமையின் பகுப்பாய்வை குறித்த அறிக்கை வெளிப்படுத்துகின்றது.
உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளில் 161 நாடுகளில் இந்த குறிகாட்டிகளின் வெளிப்பாடும் குறித்த ஆய்வில் கண்காணிக்கப்படுகின்றது.
(Visited 10 times, 1 visits today)





