ஆசியா செய்தி

நடு வானில் குலுங்கிய சிங்கப்பூர் விமானம் – உடனடி விசாரணைக்காக பேங்காக் சென்ற அதிகாரிகள்

நடுவானில் குலுங்கிய SQ321 விமானம் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, சிங்கப்பூர்ப் போக்குவரத்துப் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பேங்காக் சென்றுள்ளனர்.

லண்டனில் இருந்து சிங்கப்பூர் திரும்பிக் கொண்டிருந்த விமானம் மோசமான வானிலையால் நடுவானில் ஆட்டங்கண்டது.

அதில் பிரித்தானிய பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார். அதில் 71 பயணிகள் காயமடைந்தனர்.

SQ 321 விமானத்துக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும்.

மீண்டும் அந்த விமானத்தைச் சேவையில் ஈடுபடுத்தலாமா என்பது குறித்தும் ஆராயப்படும். தாய்லந்து, சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளின் புலனாய்வாளர்கள் அந்தப் பணியில் இணைந்து செயல்படுவர்.

(Visited 25 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி