விமானத்தில் உயிரிழந்த பயணி – பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் அதிகாரி
லண்டனில் இருந்து சிங்கப்பூர் நோக்கிச் சென்ற விமானம் குலுங்கியதில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி கோ சூன் போங் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இந்நிலையில், விமானத்தில் 73 வயதுடைய பிரித்தானிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமானத்திற்குள் ஏற்பட்ட இந்த கொந்தளிப்பான சூழ்நிலையால் மேலும் 71 பயணிகள் காயமடைந்துள்ளனர்.
7 பயணிகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அந்த விமானத்தில் 211 பயணிகளும் 18 பணியாளர்களும் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலைமையின் பின்னர், இந்த போயிங் விமானம் பாங்காக்கிற்கு திருப்பி விடப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கு அனுமதி கோரியிருந்தது, தரையிறங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன் விபத்து ஏற்பட்டது.
211 பயணிகளில் 131 பேர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான மற்றொரு விமானம் மூலம் அவர்களது இலக்குக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
ஒரே நிமிடத்தில் இந்த விமானம் காற்றில் சுமார் 6000 அடி உயரத்தில் விழுந்து, அதனால் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக விபத்து ஏற்பட்டது.