அமெரிக்காவில் மான் குட்டிகளைப் படம் எடுக்க முயன்ற நபருக்கு நேர்ந்த கதி

அமெரிக்காவில் மான் குட்டிகளைப் படம் எடுக்க முயன்ற நபரை அவற்றின் தாய் தாக்கியதில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 70 வயது டேல் சொர்மன் (Dale Chorman) என்று அடையாளம் காணப்பட்டார்.
இரு நபர்கள் பெண் மானைத் தேடிக்கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அவர்களுள் டேல் சொர்மனும் ஒருவராகும். அப்போது அந்த மான் டேலைத் தாக்கியதாக தெரியவந்துள்ளது.
மற்றோர் நபரின் அடையாளம் வெளியிடப்படவில்லை என்றும் அவர் காயமடையவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அவர் அந்தத் தாக்குதலைப் பார்க்கவில்லை என்றும் கூறப்பட்டது. டேல் சம்பவம் நடந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
(Visited 26 times, 1 visits today)