இந்தியா

இந்தியாவில் பரீட்சைக்கு படிக்காமல் போனில் நேரம் செலவழித்த மகள்… அடித்துக் கொலை செய்த தாய்!

போட்டித் தேர்வுக்குத் தயாராகி வந்த மகள், படிக்காமல் செல்போனில் மூழ்கிக் கிடந்ததால் அவரை தடியால் தாக்கி அவரது தாய் கொலை செய்த சம்பவம் ஜெய்ப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர் சீதா தேவி. இவரது மகள் நிகிதா(22). இவர் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தார். இதனால் தேர்வுக்காக அவர் படித்து வந்தார். ஆனால், படிப்பதில் கவனம் செலுத்தாமல், செல்போனில் நிகிதா அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். இதனை அவரது பெற்றோர் தொடர்ந்து கண்டித்து வந்துள்ளனர். ஆனாலும், நிகிதா செல்போன் பயன்பாட்டைக் குறைக்கவில்லை.

இதனால் அவரது செல்போனை சில நாட்களுக்கு முன்பு அவரது குடும்பத்தினர் எடுத்து வைத்துக் கொண்டனர். இனிமேல் அதிக நேரம் செல்போனைப் பயன்படுத்தமாட்டேன் என்று நிகிதா உறுதியளித்த காரணத்தால், அவரிடம் மீண்டும் செல்போனை அவரது குடும்பத்தினர் தந்துள்ளனர். தன்னிடமிருந்து செல்போன் பறிக்கப்பட்டதற்கு தனது தாய் சீதா தேவி தான் காரணம் என்று அவருடன் நிகிதா சண்டை போட்டுள்ளார்.

Rajasthan Man Beats Daughter To Death For Not Studying For Exams | Crime News - Times Now

இதுதொடர்பாக நேற்று அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் நிகிதாவின் தந்தை, சகோதரி ஆகியோர் வேலைக்குச் சென்று விட்டனர். இந்நிலையில் நிகிதாவுக்கும், சீதா தேவிக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது.அப்போது அருகில் கிடந்த தடியை எடுத்து நிகிதா, அவரது தாய் சீதா தேவியை கடுமையாகத் தாக்கியுள்ளார். அப்போது நிகிதா கையில் இருந்த தடியைப் பறித்து சீதா தேவி சரமாரியாக தாக்கினார். இதில் நிகிதாவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது.

இதையடுத்து வீட்டில் நடந்த சம்பவம் குறித்து தனது கணவருக்கு சீதா தேவி, செல்போனில் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள், காயமடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், நிகிதா ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து சீதா தேவி மீது வழக்குப்பதிவு செய்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த சீதா தேவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

(Visited 18 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே