இந்தியாவின் பாதுகாப்பில் சமரசம் செய்ய அனுமதிக்க மாட்டோம் – அலி சப்ரி
பொறுப்புள்ள அண்டை நாடான இலங்கை, இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்த இடமளிக்காது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்திய செய்தி சேனல் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் இலங்கைக்கு வருவது தொடர்பில் இந்தியாவின் கரிசனையைக் கருத்தில் கொண்டு, ஏனைய நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், வெளிப்படையான முறையில் நட்பு நாடுகளுடன் உறவுகளைப் பேணுவதற்கு இலங்கை தயாராக இருப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் ஒவ்வொரு நாட்டுடனும் ஒத்துழைக்க விரும்புகிறோம். எனினும், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், அதை மிகுந்த கவனத்துடன் சமாளிப்போம்.
சமீபத்தில் சீனா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக மாறியுள்ளது என்பதை அறிந்தேன்.
அதேபோன்று, எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கும் அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் ஏனைய நாடுகளுடன் உறவுகளைப் பேணுவதற்கான கொள்கையை இலங்கையும் பின்பற்ற விரும்புகிறது.