இலங்கை – புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை ரத்து

மோசமான காலநிலை காரணமாக புத்தளம் மாவட்ட பாடசாலைகளுக்கு நாளை (22) வழங்கப்பட்டிருந்த விசேட விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்
காலநிலை பாதிப்பின் காரணமாக மாணவர்கள் எதிர்கொள்ள நேரும் அசௌகரியங்களைத் தவிர்க்கும் வகையில் இன்றும் (21) நாளையும் (22) விசேட விடுமுறை வழங்கப்பட்டிருந்தது
இந்நிலையில் காலநிலை ஓரளவுக்கு இயல்பு நிலைக்கு மாற்றம் அடைந்துள்ளதால், கல்வி அமைச்சின் அதிகாரிகளின் வேண்டுகோளுக்கு இணங்க நாளைய தினம் வழங்கப்பட்டிருந்த பாடசாலைகளுக்கான விசேட விடுமுறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தலை வடமேல் மாகாண ஆளுனர் கௌரவ நஸீர் அஹமட் ,விடுத்துள்ளார்.
(Visited 16 times, 1 visits today)