மும்பை – விமானத்தில் மோதி 40 ஃபிளமிங்கோ பறவைகள் பலி!
மும்பையின் காட்கோபரில் உள்ள பந்த்நகரின் லக்ஷ்மி நகர் பகுதியில் நேற்று இரவு எமிரேட்ஸ் விமானம் மோதியதில் சுமார் 40 பிளமிங்கோ பறவைகள் பரிதாபமாக உயிரிழந்தன.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் எமிரேட்ஸ் விமானம் ‘இகே 508’ நேற்று இரவு 9.18 மணிக்கு பறவைகள் மீது மோதி சேதமடைந்தது. எனினும் அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக மும்பை விமான நிலைய வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் வனத்துறை கூடுதல் தலைமைப் பாதுகாவலர் (சதுப்புநிலப் பாதுகாப்பு பிரிவு) எஸ்.ஒய்.ராமராவ் கூறுகையில், “இந்தப் பகுதியில் 40 பிளமிங்கோக்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.மேலும் பல பிளமிங்கோக்கள் உயிரிழந்துள்ளனவா என்பதைக் கண்டறிய தேடுதல் பணி நடைபெற்று வருகிறது என தெரிவித்தார்
விமானம் மோதி ஏராளமான பிளமிங்கோ பறவைகள் உயிரிழந்த சம்பவம் பறவைகள் ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது.