இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
தென்மேற்கு பருவமழை படிப்படியாக இலங்கை முழுவதும் நிலைபெற்று வருவதால் தற்போதுள்ள மழை மற்றும் காற்றின் நிலைமையை வரும் நாட்களிலும் எதிர்பார்க்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். குறித்த மழைவீழ்ச்சியானது 100 மி.மீற்றர் வரையில் பதிவாகும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களும் பல மழைக்காலங்களை அனுபவிக்கின்றன.
தீவு முழுவதும் அவ்வப்போது வீசும் காற்று மணிக்கு 40-50 கிலோமீற்றர் வரை வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.